சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!!

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!!

சிங்கப்பூர்: சீனாவை சேர்ந்த ஸூ ஸிஷன் வேலை தேடுவதற்காக இந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வந்தார்.

தங்குவதற்கு சிரமம் ஏற்பட்டதால் மற்றொரு நபரிடம் சிங்கப்பூரில் தங்கவும் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கவும் வழி சொன்னதாக ஸூ வழி கூறியுள்ளார்.

அந்த நபரின் பேச்சைக் கேட்டால் ஸூ ஏதாவது ஒரு குற்றம் புரிந்தால் சிங்கப்பூரில் தங்குவதற்கு சிறப்பான அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முனைந்தார்.

ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சைனா டவுனில் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடப்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறை அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து சிங்கப்பூரில் வசிக்க முயற்சித்த ஆடவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அந்த சந்தேகம் நபரான ஸூ அதிகாரிகளிடம் 119 வெள்ளி ரொக்கத்தை கையூட்டாக கொடுக்க முயற்சித்துள்ளது தெரிய வந்தது.

பின்னர் ஸூ கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

விசாரணைக்காக சிங்கப்பூரில் தங்குவதற்கு இவருக்கு சிறப்பான அனுமதியும் கிடைத்தது.

சிங்கப்பூரில் அறிமுகமான அந்த நபரின் ஆலோசனைப்படி பாலியல் வீரிய மருந்துகளை சட்டவிரோதமாக விற்க தொடங்கினார். பிறகு ஜூலை மாதத்தில் ஸூ மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவர் அப்போது முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டின் (2025) முற்பாதியில் மேலும் 4 பேர் ஊழல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

குற்றம் புரிந்த காரணத்தினால் ஆடவர் ஸூ-க்கு 11 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan