சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்..!!!

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்..!!!

சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் குடிநுழைவு தலைமை இயக்குனரகம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதி வெளிநாட்டவர் இந்தோனேசிய குடிமக்கள் என அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தது.

செப்டம்பர் 1 முதல் பாலி ஜகாத்தா உட்பட இந்தோனேசியாவின் மூன்று விமான நிலையங்களுக்கும் படையில் பார்த்தால் தீவுக்கும் செல்லும் பயணிகள் புதிய கைபேசி செயலியை பயன்படுத்தி வருகை அறிவிப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

“ALL INDONESIA” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி அனைத்து உலக பயணிகளுக்கான வருகை அறிவிப்பு நடைமுறையை எளிதாக்குவதற்கும் பயன அனுபவத்தை மேலும் எளிதாக வேகமாக பாதுகாப்பாக மாற்றவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஹாசா, இந்தோனேசியா, ஆங்கிலம், மாண்டரின் மொழிகளில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பயணிகள் தங்களின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த படிவத்தை இலவசமாக பூர்த்தி செய்யலாம்.

 

குடி நுழைவு, சுங்கத்துறை, சுகாதாரம் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய படிவங்களை ஒரே மின் இலக்க அமைப்பில் இந்த செயலி ஒருங்கிணைத்துள்ளது.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன் ‘சத்து செஹத் ஹெல்த் பாஸ்’, ‘மின்னியல் சுங்கத்துறை அறிவிப்பு’ என்ற இந்த இரண்டையும் பயணிகள் முதலில் நிரப்ப வேண்டும்.

தற்போது ஜமாத்தா சுரபாயா பாலி விமான நிலையங்களுக்கும் பார்த்தாம் தீவின் அனைத்து உலக துறைமுகங்களுக்கும் செல்லும் பயணிகள் இந்த செயலியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.

வருங்காலத்தில் இதன் பயன்பாடு அனைத்து விமான நிலையங்கள், அனைத்துலக துறைமுகங்கள் எல்லைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ALL INDONESIA” என்ற இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பயணிகள் பதிவிறக்கம் செய்து கொண்டு படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

சிங்கப்பூரில் இருக்கும் மக்கள் இந்த ஊர்களுக்கு செல்ல கட்டாயமாக செயலியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan