காவல்துறையில் உள்ளவரே இப்படி செய்யலாமா..??

காவல்துறையில் உள்ளவரே இப்படி செய்யலாமா..??

சிங்கப்பூர்: ஒரு உதவி காவல் ஆய்வாளர் இரவு நேரத்தில் தாமதமாக குடிபோதையில் வாகனம் ஓட்டி கவனம் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.

மது போதையில் காரை தவறான பாதையில் ஓட்டிச் சென்று 28 வயதுடைய பெண் ஒருவர் ஒட்டி சென்றான் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு சென்றுள்ளார்.

மோதி விட்டு உதவுவதற்கு கூட நிறுத்தாமல் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

விபத்து நடந்த சில மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து காவல்துறையினர் விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்தனர்.

அவரை மூச்சு பரிசோதனைகள் ஈடுபடுத்திய போது 100 மில்லி லிட்டர் சுவாசத்தில் 78 மைக்ரோகிராம் ஆல்கஹால் இருப்பதை இயந்திரம் காண்பித்தது.

சட்டபூர்வ வரம்பே 35 மைக்ரோகிராம் ஆகும் ஆனால் அதற்கும் அதிகமாக அவர் குடிபோதையில் இருந்ததனால் காவல்துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

விபத்தில் சிக்கிய பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வளமான எலும்பு முறிவுகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை நடந்த பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்த பிறகு 163 நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்தார்.

இந்த குற்றம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
காவல்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு உயர்ந்த ஒழுக்க தரத்தை காப்பாற்ற வேண்டும் சட்டத்தை மீறும் அதிகாரிகள் மீது காவல்துறை கடுமையான தண்டனைகளை விதிக்கும்.

அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.

இது குறித்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
குற்றத்தை ஒப்பு கொண்டதால் இவருக்கு 14 மாத சிறை தண்டனைகளும், $6000 அபராதம் மற்றும் அவரது ஓட்டுநர் உரிமம் 7 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.