துப்புரவாளர்களின் வேலையை குறைக்கும் ட்ரோன்..!!! என்ன ஸ்பெஷல்..???

துப்புரவாளர்களின் வேலையை குறைக்கும் ட்ரோன்..!!! என்ன ஸ்பெஷல்..???

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உயரமான கட்டிடங்களில் அதிக ஆபத்துள்ள பணிகளை பாதுகாப்பாகச் செய்யவும், செயல்திறனை மேம்படுத்தவும், தேசிய வளர்ச்சி அமைச்சகம் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

பொங்கோலில் உள்ள HDB குடியிருப்புகளின் ஜன்னல் ஓரங்களை சுத்தம் செய்வதற்கும், குடியிருப்பாளர்களிடமிருந்து கருத்துகளை சேகரிப்பதற்கும் ட்ரோன்கள் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் இன்று (11.10.25) தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியதாவது, பாரம்பரிய முறையில் “ஸ்பைடர் மேன்” போல தொங்கி செய்யப்படும் ஜன்னல் சுத்தப்படுத்துதலை மாற்றி, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதே பணியை செய்வது குறித்து சோதனை நடத்தப்படுகிறது.

பொங்கோல் நடைபாதையில் 271D பிளாக்கில் உள்ள உயரமான கட்டிடங்களில், ட்ரோன்கள் நீர் அழுத்தம் மற்றும் கரைப்பான்களைப் பயன்படுத்தி வெளிப்புற சுவர்களை சுத்தம் செய்யும் திறனைச் சோதிக்கப்படுகின்றன. குடியிருப்பாளர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக, ஜன்னல்களை மூடி திரைச்சீலைகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை முடிவுகள், குடியிருப்பாளர்களின் கருத்துகள் மற்றும் செலவுக் கணக்குகளைப் பொருத்து, எதிர்காலத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பரவலாக ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கான அடிப்படையாக அமைவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

சன் சூலிங் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய மேம்பாட்டு அமைச்சகத்தில் சேர்ந்தபின், உயரமான கட்டிடங்களில் அதிக ஆபத்துள்ள பணிகளைச் செய்ய தொழில்நுட்பத்தை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து ஆராய்வதாக கூறினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK