திட்டத்தின் மூலம் என்ன பயன்கள்? 📌 உணவு மற்றும் பான நிறுவனங்களை தங்கள் செயல்பாட்டு செயல்முறைகளை மேம்படுத்துவதற்காகவும் மையப்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் உதவும்.
📌 அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பாண நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக IE சிங்கப்பூர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
📌 இந்த திட்டங்கள் மூலம் செயல் திறனை மேம்படுத்தவும் மேலும் செலவுகளை சேமித்துக்கொள்ள உதவுகிறது.
1.F&B செயல்முறை திட்டம்: ✨நியமிக்கப்பட்ட சப்ளையர்கள் F&B ஆப்ரேட்டர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவார்கள். ✨ வணிகங்கள் தங்கள் தடை செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து செயல் திறன் வருவாய் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. ✨ கடை இடத்தை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கும் மெனுக்களை வடிவமைப்பதற்காகவும் இந்த சப்ளையர்கள் உதவுவார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு IE சிங்கப்பூர் உற்பத்தி திறன் மையத்தை நியமித்துள்ளது.
இந்த மையம் நிறுவனங்களின் ஒரு குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் பொருத்தமான கூட்டாளர்களுடன் இணைந்து தகுதியுள்ள நிறுவனங்கள் ஆரம்ப அவுட்சோர்சிங் செலவுகளை குறைப்பதற்காக 50% வரை மானியங்களையும் பெற முடியும்.