அதிர்ச்சி..!! ஹோட்டல் அறையில் நடந்த கொலை சம்பவம்..!!

அதிர்ச்சி..!! ஹோட்டல் அறையில் நடந்த கொலை சம்பவம்..!!

சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் கணவர் தன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 41 வயது நபர்,இன்று(24.10.25) காலை 7.40 மணிக்கு ஹாங்ஷான் கிழக்கு சுற்றுப்புற காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சிங்கப்பூர் காவல் படை தெரிவித்ததாவது, உயிரிழந்த 38 வயது பெண், காப்ரி பை ஃப்ரேசர் சீனா சதுக்கத்தில், சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் காணப்பட்டதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மீது நாளை (25.10.25) நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டுக்கு சுமத்தப்படும்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK