2026 முதல் லிட்டில் இந்தியாவில் வரவிருக்கும் மாற்றம்..!!

2026 முதல் லிட்டில் இந்தியாவில் வரவிருக்கும் மாற்றம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பேருந்து முனையத்தின் மூடப்பட்ட காத்திருப்பு பகுதி அடுத்த ஆண்டு தொடக்கம் வாரத்தில் ஆறு நாட்கள் திறக்கப்பட்டு எட்டு மைதானங்களைக் கொண்ட Pickleball மையமாக மாற்றப்பட உள்ளது.

வர்த்தகம், தொழில் மற்றும் தேசிய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டான் சீ ஹுய், இது MOCA தொகுதியில் குடியிருப்பாளர்களின் கோரிக்கைக்கு பதிலாக உருவானதாகவும், லிட்டில் இந்தியா பேருந்து முனையம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்குவதால் மீதமுள்ள திங்கள் முதல் சனிக்கிழமை வரை பொதுமக்கள் MyActiveSG+ மூலம் முன்பதிவு செய்து விளையாட முடியும் என்றும் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில், பயன்பாட்டில் இல்லாத இடங்களை ஆராய்ந்து அவற்றை விளையாட்டு வசதிகளாக மாற்ற பல துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது என்றும், இதுபோன்ற மாற்றங்கள் ஜாலான் புக்கிட் மேரா, புக்கிட் பஞ்சாங்க் மற்றும் டோவர் கிரசெண்ட் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், புதிய லிட்டில் இந்தியா Pickle ball மையம் சமூக ஒருமைப்பாட்டையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK