சூதாட்டத்தால் சுருண்ட ஒருவரின் வாழ்க்கை..!!ஆன்லைன் சூதாட்டத்தின் இருண்ட முகம்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 34 வயதான திட்ட மேலாளர் வு ஷிஹுய், தனது வாழ்க்கையை அழித்தது கால்பந்து சூதாட்டம் என்று ஒப்புக்கொள்கிறார்.கால்பந்து போட்டிகளின் நேரடி வாய்ப்புகள் போதைப்பொருள் போன்றவை என்றும், அது தன்னை ஆபத்தான பாதைக்கு இழுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
வு ஷிஹுய் தனது இராணுவ சேவையின் போது முதன்முதலில் கால்பந்து சூதாட்டம் ஆடத் தொடங்கினார். முதலில் S$ 5 பந்தயத்திலிருந்து தொடங்கிய அவர், சிறிய வெற்றிகளால் பேராசையில் விழுந்தார்.
“ஒரு வாரத்தில் S$7,000 வென்றதும், ஒரு நாளில் அதைவிட அதிகம் இழந்ததும் உண்டு,” என்கிறார் வு.காலப்போக்கில் சிறிய பந்தயங்கள் நூற்றுக்கணக்கான வெள்ளியையும், பின்னர் ஆயிரக்கணக்கான வெள்ளியாகவும் மாறின. பத்து ஆண்டுகளில் அவரது கடன் S$2,00,000 தாண்டியது.
தனது கடனை அடைக்க, அவர் வங்கியிடமிருந்தும் தனது குடும்பத்தினரிடமிருந்தும் கடன் வாங்கினார். அவர் நன்கொடை அளிப்பதை நிறுத்தியபோது, ஏதோ தவறு இருப்பதாக அவரது தாயார் உணர்ந்தார். அப்போதுதான் உண்மை குடும்பத்திற்கு தெரிந்தது.தாய்க்கும் மகனுக்கும் இடையிலான நம்பிக்கை நொறுங்கியது.இதனால் அவர் மனச்சோர்வு, தூக்கமின்மை வாழ்க்கை முழுவதும் இருளில் விழுந்தார். இறுதியில் ஒரு கடன் வசூலிப்பவர் மிரட்டியபோது தான், அவர் ‘தி சில்வர் லைனிங் கம்யூனிட்டி சர்வீசஸ்’ மூலம் உதவியை நாடினார்.
அங்கே கிடைத்த மனநல ஆலோசனையாலும், திருப்பிச் செலுத்தும் திட்டத்தாலும், அவர் இரண்டு ஆண்டுகளில் முழுக் கடனையும் அடைத்தார். இப்போது சேமிப்புடன், குடும்பத்துடனான உறவை மீட்டுக்கொண்டார்.
“நான் இழந்தது பணம் மட்டும் இல்லை, நேரமும் நம்பிக்கையும். இனி நல்ல வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்,” என்கிறார் வு ஷிஹுய்.