ரெடியா மக்களே..!! MRT பாதையில் வரப்போகும் பெரிய மாற்றம்..!!!

ரெடியா மக்களே..!! MRT பாதையில் வரப்போகும் பெரிய மாற்றம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர்–ஜோகூர் பாரு MRT பணிக்குழு இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்டதிலிருந்து,வடக்கு பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட சுற்றுப்புற வணிகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இந்தப் பணிக்குழுவின் நோக்கம், MRT திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய வணிகங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதையும், புதிய வணிக வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்குவதாகும்.

பணிக்குழுவை வழிநடத்தும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சான் செங் ஹுய், வணிகங்களுடனான பேச்சுவார்த்தைகள் விரிவாகவும் ஆழமாகவும் நடைபெற்றதாக தெரிவித்தார்.

சிங்கப்பூர்–ஜோகூர் பாரு MRT திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பெரும்பாலான வணிகர்கள் உற்சாகமாக உள்ளதாகவும், எல்லை தாண்டிய போக்குவரத்து வசதியால் உருவாகும் புதிய வாய்ப்புகளை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், சில வணிகர்கள் திட்டத்தின் தாக்கம் குறித்து, குறிப்பாக வடக்குப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் சிறு நிறுவனங்கள் சந்திக்கக்கூடிய சவால்களைப் பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம், வணிகர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்து,தேவையான மாற்றங்கள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பை ஆராய்ந்து வருவதாக சான் செங் ஹுய் தெரிவித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK