இயல்பு நிலைக்கு திரும்பியதா??யூனோஸ் அவென்யூ7-ல் நடந்தது என்ன??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 1079 யூனோஸ் அவென்யூ 7 இல் நேற்று இரவு (01.11.25)11 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மூன்று தொழிற்சாலை அலகுகளை சூழ்ந்த தீ, ஐந்தரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக அணைக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது, இரவு 11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீயில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் சிஸ்டம் & பார்ட்ஸ் இன்ஜினியரிங் என்ற உலோக பதப்படுத்தும் தொழிற்சாலை,ஹாக் எங் செங் டிரேடிங் கம்பெனி என்ற துணி வர்த்தக நிறுவனம் மற்றும் பெஸ்ட் டோர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மர கதவு சப்ளையர் ஆகியவை அடங்கும் என்று ஆன்லைன் தகவல்கள் குறிப்பிடுகின்றன.தீ எந்த நிறுவனத்திலிருந்து தொடங்கியது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
BCA கடுமையான கட்டிட சேதத்தைக் காரணம் காட்டி தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.
அதிக சேதமடைந்த பகுதியில் ஒரு தொழில் முறை பொறியாளர் நியமிக்கப்பட்டு மதிப்பீடு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் மூன்று தொழிற்சாலை அலகுகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், நான்காவது அலகின் கூரை பகுதியளவு சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் முறையே உடல் ரீதியான அசௌகரியம் மற்றும் புகையை உள்ளிழுத்ததாக சந்தேகிக்கப்படும் காரணத்தால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.