ஆங் மோ கியோவில் பரபரப்பு..!!! குப்பை கொட்ட வந்த மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆங் மோ கியோவின் குடியிருப்புப் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.61 வயது ஓட்டுநர் ஒருவர் தனது காரை பின்னோக்கி இயக்கும் போது, வீட்டின் வெளியே குப்பைத்தொட்டியை நகர்த்திக் கொண்டிருந்த 77 வயது மூதாட்டியை மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
SGRV ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட CCTV காணொளியில்,வெள்ளை நிற செடான் கார் நிறுத்தத்திற்காக பின்னோக்கி செல்லும் காட்சி தெரிகிறது.
அதே நேரத்தில், மூதாட்டி தனது தனி வீட்டிலிருந்து வெளியே வந்து குப்பைத் தொட்டியை மாற்ற முயற்சிக்கிறார்.திடீரென, கார் அதிக வேகத்தில் பின்னோக்கி வந்து அவரை நேரடியாக மோதுகிறது.
வீடியோவில், விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் சில அடி முன்னோக்கி காரை நகர்த்தி, வெளியே இறங்குகிறார். ஆனால் பெண்ணுக்கு உதவாமலோ, பேசாமலோ, அவரை எழுப்ப முயற்சிக்காமலோ அங்கிருந்து விலகி நடந்து செல்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இச்சம்பவம் 12.11.2025 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடந்ததாக உறுதிப்படுத்தியது.77 வயது பெண் சுயநினைவுடன் இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.61 வயது ஓட்டுநரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது,காயமடைந்த பெண் சிகிச்சைக்காக வுட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கு அனுப்பப்பட்டார்.