சிங்கப்பூரில் முதல் முறையாக மிகப்பெரிய கடத்தல் முயற்சி முறியடிப்பு..!! என்ன அது..??

சிங்கப்பூரில் முதல் முறையாக மிகப்பெரிய கடத்தல் முயற்சி முறியடிப்பு..!! என்ன அது..??

சிங்கப்பூரில் 20 காண்டாமிருக கொம்புகள் கடத்தல் முயற்சியின் போது பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தக் கடத்தல் முயற்சியானது இந்த மாதம் 8 ஆம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டது.

யார் தடுத்து நிறுத்தியது..??
காண்டாமிருக கொம்புகளின் கடத்தலை தேசிய பூங்கா கழகமும் சாங்கி விமான நிலைய சேவைகள் நிறுவனமும் தடுத்து நிறுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 35.7 கிலோ கிராம் எடையுள்ள காண்டாமிருக கொம்புகள் ஆனது லாவோஸ்க்கு கடத்திச் செல்லப்பட இருந்தது.

நான்கு பெட்டிகளில் கொம்புகளும் மற்ற விலங்குகளின் உறுப்புகளும் சோதனையின் போது இருந்தது தெரியவந்தது.

சோதனை செய்யும்போது SATS நிறுவனத்தின் அதிகாரியான வெங்கடேஸ்வரன் லட்சுமணன் என்பவருக்கு சந்தேகம் எழுந்து பெட்டிகளை சோதித்தனார்.

அறைகலன் பொருள்கள் என பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் அதில் இருந்து வந்த வாடையானது சந்தேகத்தை எழுப்பிய காரணத்தினால் மீண்டும் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

X- ray சோதனைக்கு பிறகு பெட்டிகளில் கொம்புகள் உள்ளது தெரிய வந்தது. இதில் மொத்தமாக 20 காண்டாமிருக கொம்புகளைத் தவிர மேலும் 150 கிலோகிராம் எடை கொண்ட மற்ற விலங்குகளின் உறுப்புகளும் இருப்பது கண்டறியப்பட்டன.

இவற்றினுடைய மொத்த மதிப்பானது ஒரு மில்லியன் வெள்ளைக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.

கொம்புகள் ஆனது தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவை எனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK