சிங்கப்பூரில் இரண்டு இளைஞர்கள் கைது..!! ஏன்..?? எதற்கு..??
சிங்கப்பூரில் நவம்பர் 17ஆம் தேதி காலை 8:05 மணி அளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 72 இல் உள்ள ஒரு பள்ளி உணவகத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நேற்று நவம்பர் 18ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் $70 பணமும் மற்றும் ஒரு மொபைல் போனும் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே போன்று ஜுரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 41 இல் உள்ள மற்றொரு பள்ளி உணவகத்திலும் காலை 8:25 மணியளவில் மதிப்பு மிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஜுரோங் காவல் பிரிவு அதிகாரிகள் போலீஸ் கேமரா மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலமாக இரண்டு நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கண்டறிந்து புகார் பதிவு செய்யப்பட்டு 11 மணி நேரத்திற்குள் அவர்களை கைது செய்துள்ளனர்.