புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!!
மலேசியாவின் பஹாங்கு மாநிலத்தில் புலிகள் அடிக்கடி காணப்படுவதால், ஹுலு டெம்பலிங் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.
அங்கு கடந்த ஒரு வாரமாக கிராமப்புறங்களில் மலாயன் புலி பல முறை காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று ( 23.11.25) காலை 7 மணியளவில் கம்போங் மெம்பாட்டு கிராமத்தில் கிராமவாசிகள் எடுத்த வீடியோவில் புலி அருகிலுள்ள வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் சுற்றித் திரிந்தது பதிவாகியுள்ளது.
கிராமவாசிகள் தெரிவித்ததாவது, புலியின் எடை 80 முதல் 100 கிலோ வரை இருக்கலாம். ஆனால் அதன் பாலினத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
மலேசிய வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் ஆணையத்திடம் (PERHILITAN) இந்த காட்சியை சமர்ப்பித்து புகாரளித்ததாக அவர்கள் கூறினர்.