வறுமையின் வலியில் பிறந்த கனவு..!! யார் இந்த கேப்டன் ஹீ செங்கன்.???

வறுமையின் வலியில் பிறந்த கனவு..!! யார் இந்த கேப்டன் ஹீ செங்கன்.???

சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஆயுதப்படையின் இளம் இராணுவ மருத்துவ அதிகாரியான 26 வயது கேப்டன் ஹீ செங்கன், மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் காயமடைந்த குழந்தைகளின் துயரத்தை நேரில் கண்ட அனுபவம் காரணமாக தான் மருத்துவராகும் கனவை உறுதிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் கேம்ப் தில்பாரில் பணியாற்றி வரும் அவர், தற்போது வீரர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறார். தனது சிறுவயதில் இந்தோனேசியாவின் பாட்டம் தீவுக்குச் சென்றபோது,மருத்துவமின்றி வாடிய ஒரு குழந்தையை கண்டு மனம் நொந்த ஹீ செங்கன்,அப்போது மருத்துவ துறையில் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியை எடுத்தார்.

அந்த கனவை நனவாக்க சிங்கப்பூர் ஆயுதப்படையிடமிருந்து உதவித்தொகை பெற்று, அடிப்படை இராணுவப் பயிற்சி, அதிகாரி பயிற்சி, மருத்துவ அதிகாரி பயிற்சி ஆகியவற்றை முடித்து இன்று ஒரு முழுமையான இராணுவ மருத்துவராக உயர்ந்துள்ளார்.

அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் பணியாற்றி, தில்பார் முகாமில் வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கி வருகிறார். வளங்கள் குறைவாக இருக்கும் சூழலில் செயல்திறனை மேம்படுத்தவும்,திட்டமிடல் திறனை வளர்த்துக்கொள்ளவும் இந்த அனுபவம் உதவியதாக அவர் கூறுகிறார்.

மருத்துவமனையில் இருந்து இராணுவத்துக்கு மாறியபோது பல புதிய சவால்களை எதிர்கொண்டதாகவும்,நடைமுறைகளை உருவாக்குதல்,மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல்,உதவித் திட்டங்கள் எழுதுதல் போன்றவை புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்தார்.

வீட்டிலிருந்து தொலைவில் பணியாற்றும் போதும்,குடும்பத்தின் ஆதரவு அவருக்கு பலமாக இருந்தது.“நான் என் அம்மாவை அடிக்கடி தொடர்பு கொள்கிறேன்,இங்குள்ள சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் புகைப்படமாக அனுப்புவேன். அது எனக்கு நிம்மதி தருகிறது,” என்று அவர் சிரித்தபடி கூறினார்.

அவரது இலக்கு மருத்துவ வசதி இல்லாத தொலைதூர பகுதிகளுக்குச் சென்று, தேவைப்படுபவர்களுக்கு நேரத்தில் சிகிச்சை அளித்து நம்பிக்கையை வழங்குவது.

இந்த ஆண்டு நடைபெற்ற “கங்காரு பயிற்சி”யில் 170 பணியாளர்கள் 13 பகுதிகளில் பணியமர்த்தப்பட்டனர். மருத்துவம், நிதி, பொருட்கள், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் அவர்கள் பங்களித்தனர். பட்டாலியன் டில்பார் சிறிய எக்ஸ்ரே, மொபைல் பைனான்ஸ் எக்ஸ்பிரஸ், வெடிமருந்து மேலாண்மை அமைப்புகள் போன்ற புதிய உபகரணங்களை அறிமுகப்படுத்தி செயல்திறனை மேம்படுத்தியது.

முன்பு வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்காக இரண்டு மணி நேரம் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. இப்போது சிறிய எக்ஸ்ரே வசதியால் முகாமிலேயே விரைவான பரிசோதனைகள் சாத்தியமாகிறது.

அதேபோல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டெஃபனி கிரேஸ் கிருஷ்ணன், சிங்கப்பூரில் தன்னார்வப் படையில் இணைந்து தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவிலேயே சிங்கப்பூர் ஆயுதப்படைகளுடன் பணியாற்றுகிறார். அவர் கூறியதாவது, “எனக்கு இரண்டு வீடுகள் இருப்பது போல் உணர்கிறேன்,ஒன்று சிங்கப்பூரிலும் மற்றொன்று ஆஸ்திரேலியாவிலும்,இரு நாடுகளுக்குமிடையே சேவை செய்வதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறினார்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பாங்கு உள்ளூர் மக்களையும் ஈர்த்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK