சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரும் தென் கொரியாவும் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதுடன் இரு நாடுகளும் தங்களின் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.
நேற்று (02.11.25) சியோலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து இந்தச் செய்தியை அறிவித்தனர்.
இரு நாடுகளும் இணைந்து எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
அதில் பாதுகாப்பு தொழில்நுட்பம்,சைபர் பாதுகாப்பு,பொருளாதாரம்,பசுமை வளர்ச்சி, கல்வி,கலை,கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகள் அடங்கும்.
பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்ததாவது, இரு நாடுகளும் பொது சேவைகளின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக கூறினார்.
மேலும், தென்கிழக்கு ஆசியாவின் டிஜிட்டல் மாற்றத்துக்கு ஆதரவாக சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா இணைந்து ஒரு புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார்.