சிங்கப்பூர்: சிங்கப்பூர்-மலேசியா இடையிலான போக்குவரத்து சேவைகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய வாகனங்கள் பிடிபட்டன.
போக்குவரத்து சேவைகளை சட்டவிரோதமாக வழங்கிய சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட 100-க்கும் அதிகமான வாகனங்கள் இந்த ஆண்டு (2025) பிடிபட்டது என போக்குவரத்து ஆணையம் தகவலை தெரிவித்துள்ளது.
இதில் சில வாகனங்கள் மலேசியா சுற்றுலா நிறுவனங்களின் பெயரில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 400 மலேசியா சுற்றுலா நிறுவனங்களுக்கு சொந்தமான MPV வாகனங்களை சிங்கப்பூரில் உள்ள அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்ட அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.