பரபரப்பு..!!ஓஷன் டிரைவ் பகுதியில் அரங்கேறிய திருட்டு சம்பவம்..!!

பரபரப்பு..!!ஓஷன் டிரைவ் பகுதியில் அரங்கேறிய திருட்டு சம்பவம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பிரிவில் இருந்து சுமார் S$52,000 வெள்ளி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, 34 வயதுடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் மீது இன்று (08.01.26) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

சிங்கப்பூர் காவல் படை இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில்,செவ்வாய்க்கிழமை (06.01.26) காலை 10.25 மணியளவில், ஓஷன் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

அங்கு சுமார் S$52,000 வெள்ளி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம் திருடப்பட்டதாக கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், கிளெமென்டி காவல் நிலைய அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு, மறுநாள் (07.01.26) அவரை கைது செய்தனர். அதே நேரத்தில், திருடப்பட்ட ரோலக்ஸ் கடிகாரமும் மீட்கப்பட்டது.

இன்று அந்த நபர் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380-ன் கீழ் குடியிருப்புக் கொள்ளை சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK