வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!

வியட்நாமில் ரயில் தண்டவாளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஒரு பெண் கார் ஓட்டுனர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரங்கள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு கார் அசையாமல் நின்றது.

அருகில் இருந்த உள்ளூர் வசிப்பாளர் ஒருவர் இதை பார்த்தவுடன் வேகமாக வந்த சரக்கு ரயில் கையசைத்து நிறுத்த முன்னோக்கி ஓடி முயற்சித்துள்ளார்.

இறுதியில் அதை பார்த்தவுடன் ரயிலானது சுமார் காரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவமானது டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் Nghe An மாகாணத்தில் உள்ள தியென் நான் கம்யூனில் உள்ள வடக்கு தெற்கு ரயில் பாதையில் பேரழிவு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

இந்த காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து ரயில் தண்டவாளத்தில் ஒரு சிவப்பு நிற கார் நிறுத்தப்பட்டு இருப்பதையும் சரக்கு ரயில் நெருங்கி வருவது போல் இந்த காணொளியில் காட்சி ஆகியுள்ளது.

இந்த சரக்கு ரயில் கிட்டத்தட்ட 850 டன் எடை கொண்ட 24 சரக்கு கார்களை ஏற்றிச் சென்று அதிவேகத்தில் சென்றுள்ளதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பின்னர் உதவிய நபர் காரை தண்டவாளத்தில் இருந்து நகர்த்த உதவியுள்ள ரயில் நின்ற ஒரு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண் கார் ஓட்டுனருக்கு 5 மில்லியன் வியட்நாமிய டாங் அபராதம் ($246) விதிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK