சிங்கப்பூர் செராங்கூன் சாலையில் விபத்து..!! கடும் போக்குவரத்து நெரிசல் ..!!
சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸ் சுற்று வட்டாரத்தில் ஒரு பேருந்தும் ஒரு தனிநபர் வாகனமும் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சுற்று வட்டாரத்தில் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன.
டிக்டாக்கில் @darrenjosiahx என்பவரால் ஒரு காணொளி பகிரப்பட்டுள்ளது. அதில் இந்த விபத்து காரணமாக பேருந்துகள் சாலையோரத்தில் சிக்கிக் கொண்டது தெரிகிறது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தானது மே 3- ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் செராங்கூன் கார்டன் சர்க்கஸில் நிகழ்ந்துள்ளது.
ஒரு பேருந்து மற்றும் ஒரு தனிநபர் பயண வாகனம் சம்பந்தப்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
தனிநபர் நடமாடும் சாதனத்தைப் பயன்படுத்தும் 76 வயது ஆண் பயனர் ஒருவருக்கு இந்த விபத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்த பொழுது அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார்.
மேலும் அவர் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் காவல்துறையினர் அவரை விசாரணை செய்து வருகின்றனர். அந்த 76 வயது நபரும் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.