சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!!

சிங்கப்பூர் எக்ஸ்பிரஸ் பஸ் சேவைகள்: பெயர் மாற்றம்..!!

சிங்கப்பூரில் SMRT மற்றும் SBS Transit ஆகிய இரண்டு உள்ளூர் பொது போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும் 5 விரைவுச் சேவை வழித்தடங்களுக்கு (Express Bus) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

வழித்தடங்கள் நீட்டித்தல், பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் பேருந்து நிறுத்தங்களை சேர்த்தல் போன்ற சேவைகள் மேலும் விரிவாக்கப்பட உள்ளது.

இந்த 5 விரைவுச் சேவை வழித்தடங்களும் இனி நகர நேரடிச் சேவை (CDS) வழித்தடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

உள்ளூர் பேருந்து நிறுவனங்களான SMRT மற்றும் ராபிட் ட்ரான்ஸ்லேட் சேவைகளான 868E,951E மற்றும 982E ஆகியவை 647,648, மற்றும் 649 என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக இன்று( மே 11) ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

👉868E வழித்தடம் 647 என பெயர் மாற்றத்திற்குப் பிறகு நகர மையத்திலிருந்து புக்கிட் படோக்கிற்கு திரும்பி வருவதற்கு காலை நேரங்களில் கூடுதலாக ஒரு பயணமும் மாலை நேரங்களில் ஒரு கூடுதலாக இரண்டு பயணங்களும் சேர்க்கப்பட உள்ளது.

👉951E பேருந்து 648 என பெயர் மாற்றத்திற்குப் பிறகு உட்லண்ட்ஸ் அவன்யூ 6 பகுதிக்கு சேவை செய்ய வகையில் மாற்றியமைக்கப்படும் மேலும் புதிய பேருந்து நிறுத்தங்களும் அதில் சேர்க்கப்படும்.

இந்தப் பேருந்து வழித்தட மாற்றங்களைத் தொடர்ந்து பேருந்து சேவையில் கூடுதலாக 6 பேருந்து நிறுத்தங்கள் சேர்க்கப்படும், மேலும் காலை அட்டவணையும் திருத்தப்படும்.

SBS பிரான்சிட் எக்ஸ்பிரஸ் பேருந்து சேவை 850E டவுன்டவின் எக்ஸ்பிரஸ் சேவை 650 என பெயர் மாற்றப்பட்டு காலை நேரங்களில் கூடுதலாக ஒரு சேவை சேர்க்கப்படும். இந்த பேருந்து வழித்தடங்களில் யிஷூன் தெரு 41 பிளாக் 432 C க்கு முன்னாள் உள்ள பேருந்து நிறுத்தத்தின் புறப்படும் நேர அட்டவணையும் சரி செய்யப்படவுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK