சிங்கப்பூர்:தெம்பனிஸ் விரைவுச்சாலையில் ஒரு டாக்ஸி பாதையை மாற்றிக் கொண்டிருந்தபோது, அதன் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அதைத் தவிர்க்க முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30 வயதுடைய ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
SGRV பேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியின்படி,ஒரு டாக்ஸி திடீரென பாதையை மாற்றியதால்,ஒரு மோட்டார் சைக்கிள் வளைந்து கீழே விழுந்தது.
சாலையின் மேற்பரப்பு வழுக்கும் தன்மை காரணமாக போதுமான பிரேக்கிங் தூரம் இல்லாததால் மோட்டார் சைக்கிள் சமநிலையை இழந்து கீழே விழுந்திருக்கலாம் என்று அந்தப் பதிவு தெரிவிக்கிறது.