பூனை நிர்வாக கட்டமைப்பு திட்டம் ஓராண்டுக்கு முன்னர் நடப்புக்கு வந்த பிறகு பூனைகளுக்கு உரிமம் தரப்பட்டதாக விலங்கு நல மருத்துவ சேவை அமைப்பு நேற்று(செப்டம்பர் 1ஆம் தேதி) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது.
அனைத்து பூனைகளுக்கும் மின் சில்லுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதை உரிமம் பெற்று இருக்க வேண்டும். இவை இரண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற பூனைகளில் சுமார் 95% பூனைகளுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
41,500க்கும் அதிகமானோர் பூனை உரிமையாளர்களுக்கான பயிற்சி இணையும் வழி முடித்துள்ளனர்.