சிங்கப்பூரில் விருது வழங்கும் விழா..!!!எதற்கு? யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவில் முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் விருது வழங்கும் விழா..!!! எதற்கு? யாருக்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவில் முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிழக்கு- மேற்கு பாதையில் உள்ள பயோனியர் நிலையத்தில் SMRT ஊழியரான சுல்தான் ஹமீத், பேருந்து நிலையத்திற்குள் ஒரு பெண் ஒரு ஆணை துரத்தி வந்ததையும், எஸ்கலேட்டரில் பயணம் செய்யும்போது யாரோ ஒருவர் அந்த பெண்ணை பிடித்து இழுத்ததாக உணர்ந்த அந்தப் பெண் சுல்தான் ஹமீத்திடம் கூறியுள்ளார்.

அந்த நபரை சுல்தான் ஹமீத் கைது செய்து காவல் துறையிடம் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையின்போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு 3 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 18ஆம் தேதி நடந்தது. இதுபோன்ற மற்றொரு சம்பவம் ஜூன் 7-ஆம் தேதி நடந்தது.

செங்காங்கிலிருந்து உட்லீ செல்லும் ரயில் பயணத்தின் போது நடந்த சம்பவமாகும். இந்த ரயில் பயணத்தின் போது நார்த் ஈஸ்ட் லையன் ஊழியர் ஒருவர் ஒரு பெண் பயணியின் தொடையை பின்புறத்தை தொட்டதாக செங் சோங் குவானுக்கு புகார் அளித்துள்ளார்.

இந்த நபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் போது, அந்த நபர் கூறிய தகவலின்படி, சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் இந்த வழக்கு இன்னும் நிறைவடையவில்லை.

இது போன்று இன்னும் இரண்டு சம்பவங்களும் நடந்துள்ளன. நான்கு வழக்குகளும் கடந்த ஐந்து மாதங்களுக்குள் நடந்துள்ளன. இவற்றில் மூன்று மாதங்களுக்குள் விசாரணை முடிந்தது. சில வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்த சம்பவங்களின் போது குற்றவாளிகளை பிடிக்க முயன்ற நபர்களுக்கு விருது விழா இன்று (4-ஆம் தேதி) நடத்தப்பட்டதது.

பொதுப்போக்குவரத்து வலை அமைப்பில் பணி புரியும் 4 MRT பணி ஊழியர்களுக்கு இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தீர்ப்பதற்காக காவல்துறையினருடன் ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தினால் பொது போக்குவரத்து பாதுகாப்பு கட்டளையின் சமூக கூட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan