யிஷூனில் கார் - பேருந்து மோதல்...!!!
இளம்பெண் உயிரிழப்பு...!!
சிங்கப்பூர்: யிஷூனில் சமீபத்தில் நடந்த ஒரு கோரமான போக்குவரத்து விபத்தில், ஒரு கார் பொதுப் பேருந்தின் பின்புறத்தில் மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த 23 வயது பெண் ஒருவர் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் காவல்துறையின் தகவலின்படி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகாலை 5.35 மணியளவில் யிஷுன் அவென்யூ 2 மற்றும் யிஷுன் சென்ட்ரல் ரோடு 1 சந்திப்பில் இந்த விபத்து நடந்தது.