மின்-பைக் ஓட்டுநரை மோதிய கார் ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!!

மின்-பைக் ஓட்டுநரை மோதிய கார் ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி, மின்-பைக் ஓட்டுநர் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீது இன்று (28.11.25) நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது.

இம்மாதம் திங்கட்கிழமை (24.11.25) பிற்பகல் 2:30 மணியளவில் தெம்பனிஸ் அவென்யூ 7 மற்றும் தெம்பனிஸ் தெரு 42 சந்திப்பில் விபத்து நடந்தது.

இந்த விபத்தில் 67 வயதான மின்-சைக்கிள் ஓட்டுநர் கடுமையாக காயமடைந்தார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்தார்.

விசாரணையின் போது CCTV காட்சிகள் மூலம் 35 வயதான ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டு, செவ்வாய்கிழமை (26.11.25) கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப விசாரணைகள் படி, அவர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதும்,காயமடைந்த நபருக்கு உதவாமல் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும்,சட்டப்படி 24 மணி நேரத்திற்குள் விபத்து குறித்த தகவலை காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறையையும் அவர் மீறியுள்ளார்.

சந்தேக நபர் மீது மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அபராதம், சிறைத்தண்டனை மற்றும் ஓட்டுநர் உரிமை ரத்து ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK