SP மொபிலிட்டிக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்த CCC..!! எதற்காக..??

SP மொபிலிட்டிக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்த CCC..!! எதற்காக..??

சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCC) மற்றொரு மின்சார வாகன சார்ஜிங் பாய்ண்ட் வழக்குநரான ChargeEco வை SP மொபிலிட்டி கையகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.

ChargeEco என்பது SMRT இன் ஸ்டெரைட்ஸ் மட்டும் ஒய்.டி.எல் பவர்செராயா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு நிறுவனமாகும்.

இந்த வருடத்தின் (20263 ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஆரம்ப கட்ட பொது ஆலோசனையின் போது பெறப்பட்ட கருத்துக்களின் படி, முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்த போட்டி தொடர்பான கவலைகளை எழுப்பக்கூடும் என்று CCC ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஏனென்றால் இரு நிறுவனங்களுக்கும் கிழக்கு பகுதியில் உள்ள HDB கார் பார்க்கிங்களில் மின்சார வாகன சார்ஜிங் பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு அவை ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

றிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர இரு நிறுவனங்களும் வழங்கும் சார்ஜிங் விலைகள் முந்தைய விலைகளை விட அதிக அளவில் இருக்காது என்பதையும், மின்சார வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் கிழக்கு பகுதியில் சார்ஜிங் சேவைகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் பாதிக்கப்படாது என்பதையும் SP மொபிலிட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த உறுதிமொழிகள் அனைத்தும் இன்று (மே 28) அமலுக்கு வர இருக்கின்றன. மேலும் இவை 3 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SP மொபிலிட்டி தனது உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என்ற CCC சந்தேகித்தால் ஒரு கண்காணிப்பு அறங்காவலரை நியமிக்கும்படி SP மொபிலிட்டி தரப்பு கூறியுள்ளது.

இரண்டாவது சுற்றில் பொதுது ஆலோசனையில் பெறப்பட்ட கருத்துக்களை வைத்து போட்டி தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய இந்த உறுதிமொழிகள் போதுமானவை என்று CCC அறிவித்துள்ளது. எனவே SP மொபிலிட்டி இந்த உறுதிமொழிகளைச் செயல்படுத்தி அவற்றுக்கு இணங்கும் பட்சத்தில் முன்மொழியப்பட்ட பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் CCC கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK