மின் கார் பயனாளர்களுக்கு முக்கிய தகவல்..!!சார்ஜிங் சேவையில் மாற்றம்..!!

மின் கார் பயனாளர்களுக்கு முக்கிய தகவல்..!!சார்ஜிங் சேவையில் மாற்றம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கார் மின்னூட்டச் சேவைகளை வழங்கிய TotalEnergies நிறுவனம், உள்ளூரில் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் அனைத்து மின்னூட்ட நிலையங்களும் டிசம்பர் 31க்குள் பிற நிறுவனங்களுக்கு மாற்றப்படும். TotalEnergies நிறுவனம் தனது மின்னூட்ட முனையக் கட்டமைப்பை நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கு ஏற்கனவே மாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.


BlueSG கார் பகிர்வு திட்டம் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.இருப்பினும், இந்த மாற்றம் TotalEnergies நிறுவனத்தின் பிற சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், TotalEnergies நிறுவனத்தின் 63 மின்னூட்ட நிலையங்களை SP Mobility நிறுவனம் இன்று (28.11.25) முதல் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளது.

இவை பிடோக், பீஷான்,ஹவ்காங், பொங்கோல் உள்ளிட்ட பல வட்டாரங்களில் அமைந்துள்ளன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK