சிங்கப்பூர் ரயில் சேவையில் மாற்றம்..!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்…!!

சிங்கப்பூர் ரயில் சேவையில் மாற்றம்..!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்...!!

தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட், டவுன்டவுன் ரயில் பாதைகளின் சேவை நேரம் ஆனது இந்த வார இறுதிகளில் மாற்றப்பட உள்ளது.

இது குறித்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), SMRT Trains, SBS Trasnsit ஆகியவை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்த மாற்றம் எதற்கு?
ரயில் பாதைகளில் புதிய நிலையங்களை இணைக்கும் பணிகளுக்காக சேவை நேரம் ஆனது குறைக்கப்பட உள்ளது.

எந்த ரயில் சேவைகளில் மாற்றம்?
தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட்: மே 22 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை

டவுன்டவுன்: ஜூலை 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை

வெள்ளிக்கிழமைகளில் ரயில் சேவைகள் முன்கூட்டியே இரவு 11:30 மணிக்கு நிறுத்தப்படும்.

சனிக்கிழமைகளில் ரயில் சேவை ஆனது சற்று தாமதமாக காலை 8:30 மணிக்கு தொடங்கும். மேலும் சனிக்கிழமைகளில் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மூன்று மாற்று பேருந்து வசதிகள் வழங்கப்படும் என இந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் வேறு ரயில் சேவைக்கு மாறி செல்வதற்காக Bugis(பூகிஸ்), MacPherson (மெக்பர்சன்) ரயில் நிலையங்களில் பேருந்து இயக்கப்படும். இந்த ஆண்டு (2026) டவுன் டவுன் ரயில் பாதையில் 2 புதிய நிலையங்கள் திறக்கப்படும்.

2 புதிய ரயில் நிலையங்களின் பெயர்கள்: Xilin, Sungei Bedok

தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் Bedok South, Sungei Bedok என்ற இரண்டு நிலைகள் சேர்க்கப்படும். புதிய நிலையங்களை மூலமாக தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட், டவுன்டவுன் ரயில் தேவைகளை இணைக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK