சாங்கி விமான நிலையத்தில் கைதான சீன நபர்..!! காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் கைதான சீன நபர்..!! காரணம் என்ன..??

கடந்த ஆண்டு(2025) டிசம்பர் 27ஆம் தேதி விமான நிலையத்தில் அலுமினிய தாழ் பயன்படுத்தி சிகரெட்டுகளை மறைத்து வைத்து 36 வயது சீன நபர் கடத்த முயற்சித்துள்ளார்.

அப்போது ஜாமான்களின் படங்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணியாளர்கள் மூலமாக அவர் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கண்டறிந்தனர்.

மேலும் சோதனைகள் ஈடுபட்டபோது அவர் கொண்டு வந்தால் சாமான்களுக்குள் அலுமினியத்தால் உள்ளே சுமார் 209 சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர்.

ஸ்கேன் செய்தபோது வந்தா புகைப்படத்தில் சிகரெட் அலுமினிய தாளில் சுற்றப்பட்டு பின்னர் துணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது அம்பலமானது.

உடனேயே அந்த சீனா நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அது தொடர்புடைய ஆதாரங்களும் சந்தேக நபரும் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு சோதனை சாவடிகள் ஆணையம் நேற்று(06/01/2026) அதன் பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK