கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X' பக்கம் முடக்கம்..!!
சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் இளைஞர்கள் பற்றி வெளியான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) என்ற பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.
கடந்த 16-ந் தேதி அபிஜீத் தீப்கே என்பவரால் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் இணைந்தனர்.
மேலும் கட்சியின் எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்தொடரத் தொடங்கினர்.
எக்ஸ் பக்கம் முடக்கம்: இந்நிலையில், சி.ஜே.பி. கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதை அந்தக் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சாதனை: இதற்கிடையே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் 1.60 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்டு சாதனை படைத்துள்ளது.
இது பா.ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.