சிங்கப்பூர் - பராகுவே இடையே வர்த்தக ஒப்பந்தம்..!! நடைமுறைக்கு வந்துவிட்டது..!!
சிங்கப்பூருக்கும் பராகுவேக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது பிப்ரவரி 1 அன்று நடப்புக்கு வந்தது என சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தம் உடன்பாட்டு கையெழுத்து இடப்பட்டது.
மெர்க்கோசூர் எனப்படும் தென் பொதுச்சந்தை அமைப்பை அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்ட அந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றுடன் சிங்கப்பூர் தற்போது முதல் முறையாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
மெர்க்கோசூர் – சிங்கப்பூர் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தற்போது நடைமுறைக்கு வரப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூரின் 29 ஆவது உடன்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூருக்கும் உருகுவேக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் முதல் தேதியில் நடப்புக்கு வரும் என்பதையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா, பிரேசில் ஆகியவற்றனுடனான ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு நாடுகளிலும் சிங்கப்பூர் வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வணிகம் செய்வதற்கு தகுந்த சூழலை ஒப்பந்தம் ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இதனுடைய கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மதிப்பானது கிட்டத்தட்ட மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். மேலும் நான்கு நாடுகளின் மொத்த மக்கள்தொகை மதிப்பானது 295 மில்லியனைக்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரை சேர்ந்த கிட்டத்தட்ட 200 நிறுவனங்கள் ஆனது ஏற்கனவே அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
எண்ணெய, எரிவாயு, மின்னிலக்க தீர்வுகள், வேளாண், உற்பத்தி, தளவாடம், உள்கட்டமைப்பு, விருந்தோம்பல் ஆகிய துறைகளில் இந்த வணிகம் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான சமரச பேச்சானது 2018 ஆம் ஆண்டு ஜூலைகள் தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பந்தமானது 2022 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
பிறகு 2023 டிசம்பர் 7ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் நான்கு நாடுகளின் உடைய அமைச்சர்களும் தடையற்ற இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.