செந்தோசாவின் சிலோசோ, தஞ்சோங், பலவான் ஆகிய கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். மேலும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
செந்தோசா கோவுக்கு தூரத்தில் உள்ள கடலில் முதலை தென்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு (2026) இரண்டாவது முறையாக அதே பகுதியில் முதலை தென்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கெப்பல் பே வளைகுடா பகுதியில் கடலில் முதலை தென்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது முதலையை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது மேலும் கடற்கரை பகுதிகளில் சுற்றுக்காவலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.