சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை..!! $19,000 மதிப்புள்ள பொருள் கைப்பற்றல்..!!

சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை..!! $19,000 மதிப்புள்ள பொருள் கைப்பற்றல்..!!

சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று(மே 8) தனது முகநூல் பக்கத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 மற்றும் 29ஆம் தேதிகளில் சர்க்யூட் சாலை மற்றும் கில்லெமார்ட் காலையில் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தியதாக பதிவிட்டுள்ளது.

கிரிமா சாலையில் நடந்த சோதனை நடவடிக்கையில் சமைத்த உணவு கடை நடத்தி வந்த 62 வயது சிங்கப்பூர் நபரும் அவருடன் உடன் இருந்த 48 வயது பெண்ணும் அவர்களது கடையில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்றது தெரியவந்தது.

மேலும் சர்க்குலர் சாலையில் நடைபெற்ற அதிரடி சோதனையின் போது, HDB அடுக்குமாடி கட்டடத்தின் தரைதளத்தில் கடத்தல் சிகரெட்டுகளை விற்றதாக 68 வயது மற்றும் 70 வயதுடைய இரண்டு சிக்கினர்.

இந்த அதிரடி சோதனை மேற்கொண்டதில் 97 க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் மற்றும் 498 பொட்டளங்கள் கொண்ட கடத்தல் சிகரெட்டுகளையும் சிகரெட் விற்பனை மூலம் கிடைத்த வருமானமாக கருதப்படும் $875 என்ற ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் நான்கு ஆண்களும் பெண்களும் இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்தால் சிகரெட்டுகளின் மொத்த வரித்தொகை $19,000 ஆகும்.

கைது செய்யப்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் பெண்களில் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள மூவர் மீது உள்ள விசாரணை தற்போது வரை நடைபெறுவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்கி விற்பது, அதனை சேமித்து வைப்பது அல்லது அதனை பயன்படுத்துவது சட்டவிரோதமான செயல் எனவும் இது மிகவும் கடுமையாக தண்டிக்கப்படும் குற்றமாக கருதப்படுகிறது என்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK