சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் தற்பொழுது அதிகரித்து வரும் deport..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர் செல்பவர்களை தற்பொழுது அதிகமாக நாட்டிற்குள் அனுமதிக்காமல் ICA எனப்படும் சிங்கப்பூர் இமிகிரேஷன் வெளியேற்றி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இருந்து அதிகமானோர் சிங்கப்பூருக்கு வேலைக்காக தினந்தோறும் சென்று கொண்டே உள்ளனர்.
முன்பெல்லாம் சிங்கப்பூரில் சரியான ஆவணங்கள் இல்லாத நபர்களை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றி வந்தனர்.

ஆனால் தற்பொழுது சரியான ஆவணங்கள் இருந்தாலும் சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை சிங்கப்பூர் இமிகிரேஷன் ஆனது சிங்கப்பூருக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அவர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பி வருகிறார்கள்.

குறிப்பாக இதில் அதிகமாக திருப்பி அனுப்பப்படுபவர்கள் S.Pass மற்றும் E.pass வேலைக்கு செல்பவர்கள் தான்.

நாள் ஒன்றுக்கு இந்த இரண்டு பாசில் செல்பவர்களை 40லிருந்து 50 வரையிலான எண்ணிக்கையில் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றுகின்றனர்.

இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுவது அவர்கள் ஆவணங்களில் இருக்கும் தகவல்கள் பொய்யானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு இபாஸில் அவருடைய சம்பளம் 14 ஆயிரம் சிங்கப்பூர் டாலராக உள்ளது. ஆனால் அவரிடம் கேட்டால் அவருடைய சம்பளம் 1200 டாலர் என்று சொல்கிறார்.

இவ்வளவு சம்பளம் வாங்குபவர் எந்தவித குவாலிபிகேஷன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இதுபோல் பல கம்பெனிகளும் ஏஜென்ட்களும் ஏமாற்றுவதாலேயே பெரும்பாலான நபர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றுகிறார்கள்.

ஒரு சிலர் இதில் சரியான சம்பளம் இருந்தாலும் கூட பாதிக்கப்படுகின்றனர்.

இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் திருப்பி அனுப்பப்படுபவர்கள் ஏஜெண்டர்களிடம் கட்டிய பல லட்சம் பணத்தை திருப்பி வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

முடிந்தவரை தற்பொழுது உள்ள சூழ்நிலையில் சிங்கப்பூருக்கு E.pass மற்றும் TEP பாசில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

இது போன்ற சிங்கப்பூரில் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை பற்றி தெரிந்துகொள்ள நமது sgtamilan இணைய பக்கத்தை தொடர்ந்து பின் தொடரவும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK