சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை..!!!

சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை..!!!

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் மின் சிகரெட் புகைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில் பேருந்து பொது போக்குவரத்து நிலையங்களில் மின் சிகரெட் புகை புகைப்பவர்கள் காணப்பட்டால் அவர்கள் உடனே வெளியேற்றப்படுவார்கள்.

மேலும் அவர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம்.

சிங்கப்பூரில் மின் சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் போதையில் இருப்பதாக பொது இடங்களில் கண்டறியப்பட்டாலும் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.

சிங்கப்பூரில் ரயில்கள், பேருந்துகள் ஆகியவை பாதுகாப்பாகவும், புகையில்லாமலும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஊழியர்கள் ரோந்து பணியின் மூலம் கண்காணிப்பார்கள் என்று ஆணையம் கூறியுள்ளது.

பொது போக்குவரத்து நிலையங்களில்யாரேனும் மயக்க நிலையில் இருந்தால் கூட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

மேலும் இந்த குற்றங்களில் ஈடுபட்டால் சட்ட விரோதமானது எனவும், ஈடுபடுவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், நிலப் போக்குவரத்து ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டி உள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan