சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!!
சிங்கப்பூர்: உள்ளூர் குளிர்பான நிறுவனமான YEO HIAP SENG (YHS) சிங்கப்பூரிலிருந்து தனது தொடர்பான உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது.
YEO HIAP SENG (YHS) என்ற நிறுவனம் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனமாகும்.
இந்த பணி நீக்கம் குறித்து YHS நிறுவனம் கூறியதாவது: 👉🏻ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள குழுமத்தின் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தித் திறனை உகந்த முறையில் பயன்படுத்தவும் மற்றும் வலைஅமைப்பின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் இந்த சீரமைப்பானது உதவும் என்று கூறியுள்ளது.
👉🏻இருப்பினும் செம்பாவாங் செனோகோ வளாகம் மற்றும் தலைமையகம் ஆகியவை சிறு அளவிலான உற்பத்தியைக் கொண்டு செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
👉🏻சிங்கப்பூரில் இந்த சீரமைப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் போன்ற ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும், நிறுவனத்தால் முடிந்த அனைத்து உதவிகளும் ஊழியர்களுக்கு செய்து தரப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
👉🏻பாதிப்புக்குள்ளான ஊழியர்களுக்கு அவர்களின் இழப்பீடுகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணிக்காலத்திற்கு ஏற்ப, பணிநீக்க இழப்பீடு தொகுப்பானது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
👉🏻ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணி நீக்கத் தொகுப்புக் குறித்தும், நிறுவனத்தின் சீரமைப்பு திட்டம் குறித்தும் ஏற்கனவே உணவு மற்றும் பானத் தொழிலாளர் சங்கத்திற்கு (FDAWU) தெரிவித்ததாக நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனங்களில் ஊழியர்களைப் பணி நீக்கும் செய்வது இது முதல் முறை அல்ல.2024 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஓட்லி நிறுவனம், அதன் சிங்கப்பூர் தொழிற்சாலையை மூடியதன் காரணமாக அதன் 25 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது.மேலும் 2022 ஆம் அதிகரித்து வரும் செலவு அழுத்தங்கள் காரணமாக 32 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.