சிங்கப்பூரில் மலேசியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??
சிங்கப்பூர் : 41 வயதான மலேசிய தொழிலாளி ஒருவருக்கு சிங்கப்பூரில் மோசடி செய்த குற்றத்திற்காக 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மலேசியர் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய பல்லாயிரம் ரிங்கிட் கடனை பணம் கடத்துபவராக வேலை செய்வதன் மூலம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், மோசடியாக பெற்ற பணத்தை மாற்றுவதற்காக சிங்கப்பூர் எல்லையை கடந்துள்ளார்.
மூன்று நாட்களில் அவர் பலரிடமிருந்து கிட்டத்தட்ட 4,00,000 பணத்தையும் தங்க கட்டிகளையும் வசூலித்துள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் டான் மிங் சுவாங் மீது ஊழல் தடுப்பு, போதை பொருள், கடத்தல் மற்றும் கடுமையான குற்றச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்று கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மலேசியாவில் வேலை இல்லாமல் சில வேலைகளை செய்து வந்துள்ளார். ஜூலை 2025-ல் அவர் RM12,000 கந்துவட்டி கடனில் சிக்கியிருந்தார்.
அப்போது டெலிக்ராம் என்ற ஒரு அரட்டை செயலியில் உள்ள குழுவில் அவர் சேர்ந்துள்ளார். அதில் அவரது கடனை அடைப்பதற்காக ஒரு வாரம் கந்துவட்டி நிறுவனத்தில் வேலை செய்யுமாறு ஒருவர் அவருக்கு பரிந்துரைத்துள்ளார்.
அந்த வேலையளிப்பவரின் அடையாளம் தெரியாத போதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த வேலையை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு குற்றக் கும்பலுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டதும், அந்த மோசடிக்கு பலியான உள்ளூர் மக்களிடமிருந்து திருடப்பட்டப் பணத்தை வசூலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் வேலையை தொடங்கிய பிறகு தினமும் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எல்லையைக கடந்து சென்று, பின்னர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை வசூலித்து வந்துள்ளார்.
ஜூலை 9 முதல் 11ஆம் தேதிக்குள் 70 வயதுகளில் இருந்த சில முதியவர்கள் உட்பட அவர் மொத்தம் 12 முறை திருட்டு ப பணத்தை வசூலித்துக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏற்பட்ட மொத்த இழப்பு S$4,00,000 என்று கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவரிடம் பணத்தை ஒப்படைத்து ஏமாந்தவர்களில் 6 பேர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் 74 வயதான ஓய்வு பெற்ற பெண்மணி மிகவும் மோசமான இழப்பை அவரால் சந்தித்துள்ளார்.
இந்த பெண்மணி கடந்த ஆண்டு (2025) ஜூலை 11ஆம் தேதி அன்று இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளார். பெண்மணி காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு (2015) ஜூலை 12-ம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக பேருந்தில் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் அவரை கைது செய்வதற்குள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $3,95,500 மதிப்புள்ள திருட்டு பணத்தையும் இரண்டு தங்க கட்டிகளையும் அவர் மோசடி செய்துள்ளார். அவர் செய்த மோசடியில் இன்று வரை எந்த இழப்புகளும் மீட்கப்படவில்லை.