பரபரப்பு..!!ரெட் ஹில்லில் HDB குடியிருப்பில் தீ விபத்து...!!!
சிங்கப்பூர்: ரெட் ஹில்லில் உள்ள பிளாக் 86 HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சிவில் பாதுகாப்புப் படை (SCDF) தகவலின்படி, அதிகாலை 1.15 மணியளவில் (28.08.25) தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF பணியாளர்கள், நான்காவது மாடி வீட்டு வாழ்க்கை அறையில் தீ பரவியதை கண்டனர்.
அவர்கள் உடனடியாக தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். மேலும், ஒரு படுக்கையறையிலிருந்து மூன்று பேரை மீட்டனர்.
அவர்கள் சுவாசப் பிரச்சனை மற்றும் சிறிய தீக்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.வேறு மாடியில் இருந்த ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், வாழ்க்கை அறையில் ஏற்பட்ட மின்சார கசிவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.