சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி ஹேக்...!!! என்ன நடந்தது..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் டிஜிட்டல் பணப்பை அமைப்பு ஹேக் செய்யப்பட்டதில் சுமார் S$8.3 மில்லியன் மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளது.
காவல்துறை அறிக்கையில், பரிமாற்ற நிறுவனத்தின் கிரிப்டோ பணப்பைகளில் பல ஊடுருவல்கள் நடந்ததாகவும், அதன் மூலம் கிரிப்டோகரன்சிகள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணைக்குப் பின், குற்றப் புலனாய்வுத் துறையின் சைபர் குற்றக் கட்டளை மைய அதிகாரிகள் 36 மற்றும் 38 வயதுடைய இருவரைக் கைது செய்தனர். போலீசார் இதுவரை சுமார் S$1.54 மில்லியன் கிரிப்டோகரன்சியை மீட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது ஐந்து மடிக்கணினிகள்,நான்கு மொபைல் போன்கள், மூன்று கிரிப்டோகரன்சி ஹார்டுவேர் வாலெட்கள் உட்பட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றவாளிகள் மீது கணினித்தரவை அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் கிரிப்டோகரன்சி திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்படாத தரவு அணுகலுக்கு S$5,000 அபராதம்,2 ஆண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.