F1 கார் பந்தய எச்சரிக்கை!

F1 கார் பந்தய எச்சரிக்கை!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஃபார்முலா ஒன் (F1) நைட் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயத்தில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, “வெப்ப ஆபத்து” நிலைமைகளின் கீழ் நடைபெறும் முதல் பந்தயமாக வரலாறு படைக்க உள்ளது.

சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) பந்தய இயக்குனர் ரூய் மார்க்வெஸ், வெப்பக் குறியீடு 31°C-ஐ தாண்டும் என்ற வானிலை முன்னறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து அணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வெப்ப எச்சரிக்கையை அறிவித்தார்.

2023 கத்தார் கிராண்ட் பிரிக்ஸுக்குப் பிறகு அறிமுகமான புதிய விதிமுறைகள் படி:

👉 ஓட்டுநர்கள், உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த குளிரூட்டும் உள்ளாடை அணிய வேண்டும்.

👉 இல்லையெனில், கூடுதல் 0.5 கிலோ பேலஸ்ட்டை காரில் ஏற்ற வேண்டும்.

👉 ஒவ்வொரு கிலோ எடை கூடுதல்,நேரத்தை ஒரு வினாடியின் பத்தில் ஒரு பங்கு பாதிக்கும் என்பதால் இதில் தீமையும் உள்ளது அதே அளவு நன்மையும் உள்ளது.

📺 நேரடி ஒளிபரப்பு:

பொதுமக்கள் அக்டோபர் 3 முதல் 5 வரை – Channel 5 & MeWatch தளத்தில் பார்வையிடலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK