குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!!

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் ...!!

சிங்கப்பூரில் தன் மகளின் குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத காரணத்தினால் தந்தைக்கு குடும்ப நீதிமன்றம் ஆனது எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனது முன்னாள் மனைவிக்கும், அவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மூத்த மகளையும் மகனையும் அவர் மனைவி வளர்த்து வருகிறார் என்றும், அவரது இளைய மகனை அவர் பராமரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அந்த நபர் கூறியுள்ளார்.

அவரது மகளுக்காக மாதம் $400 மற்றும் அவனுக்காக $300 வீதம் இரண்டு குழந்தைகளுக்கும் பராமரிப்பு தொகையாக, முன்னாள் மனைவிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அந்த நபர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் வரை பணம் செலுத்தாமல் இருந்துள்ளார். அதனால் முன்னாள் மனைவி அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.

பணத்தை ஏன்செலுத்தவில்லை என்று நீதிபதி கேட்டபோது, அந்த நபர் தன் மகளுக்கு 21 வயதுக்கு மேலாகி விட்டதாகவும், 8 மாத Internship – இன் போது $2,200 சம்பாதித்துள்ளதாகவும் பதில் அளித்தாார்.

இதனை மறுத்த முன்னாள் மனைவி தங்களது மகள் இன்னும் படித்துக் கொண்டிருப்பதாகவும், அவளது Internship 3 மாதங்கள் தான் எனவும், அதில் அவளது வருமானம் $600 மட்டுமே எனவும் கூறினார்.

இதனை கேட்ட நீதிபதி 8 மாத இன்டர்ன்ஷிப்பில் $2200 என்பது மிக அதிகமான ஊதியம் என்று நினைத்தார்.மேலும் தாய் கூறியது நம்பும் வகையில் இருப்பதாகவும் எண்ணினார்.

மேலும் அந்த மகளுக்கு 21 வயது ஆகவில்லை என்பதையும் அவளது படிப்பானது கடந்த ஆண்டு அக்டோபரில் முடியவில்லை எனவும் நீதிபதி கண்டறிந்து, தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி தீர்ப்பில் கூறியதாவது,
அந்தப் பெண் வேலைக்கு செல்வதற்கு முன், அவளது தந்தைக்கு அந்த குழந்தையை பராமரிக்கும் முழு பொறுப்பும் இருக்கிறது.

அதனால் அவளது செலவுகளை சமாளிப்பதில் தந்தையாய் அவர் கடமைப்பட்டிருக்கிறார்.

இன்டர்ன்ஷிப் என்பது வேலையில்லை என்றும், அது அவளது போக்குவரத்து,  உணவு மற்றும் உடை செலவுகளுக்கு போதுமான வகையில் இருக்கும் என்பதால் இன்டர்ன்ஷிப்பை காரணமாகக் கூறி பணம் செலுத்துவதை நிறுத்தி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

கடைசியில் நீதிபதி, அந்த நபர் அவரது மகளுக்கு குழந்தைப் பராமரிப்புத் தொகையாக $9,980 -யைத் திருப்பி  செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மூத்த மகனின் பராமரிப்புத் தொகையில் பாதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மாதம் $300 செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

மூத்த மகளின் செலவுகள் உட்பட மொத்தம் $14,480 தொகையை 4 நான்கு மாதத் தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும் எனவும், இப்போது சொன்னது போல எந்தவொரு  காரணமும்  இனி சொல்லக்கூடாது எனவும், மீறினால் நீதிமன்றத்தை அவமதித்தாக கூறி சிறையில் அடைக்கப்படுவார் என்று நீதிபதி எச்சரித்தார். மேலும் நிலுவைத் தொகைப் போக $3,000 நீதிமன்றக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK