கியாவோன் சாலை விபத்துக்கு காரணமான பெண் ஓட்டுநர் கைது..!!

கியாவோன் சாலை விபத்துக்கு காரணமான பெண் ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூர்: கியாவோன் சாலையில் நடந்த பயங்கர கார் விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் 38 வயது பெண் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, பிப்ரவரி 6ஆம் தேதி காலை 11.50 மணியளவில் ஒரு வாகனம் மற்றும் இரண்டு பாதசாரிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து நடந்தது.

இதில் 6 வயது சிறுமியும் 31 வயது பெண்ணும் காயமடைந்த நிலையில் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால்,6 வயது சிறுமிக்கு காயங்கள் மிகவும் தீவிரமாக இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் இன்று(08.02.26) வெளியிட்ட தகவலில் சாலையில் போதுமான கவனமின்றி வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக பெண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg