சிங்கப்பூரில் தீ விபத்து அறிக்கை வெளியீடு: அதிகரித்துள்ளதா..??குறைந்துள்ளதா..??
சிங்கப்பூரில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2025) தீ விபத்துகளின் மூலம் காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களையும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 80 பேர் தீ விபத்துகளில் காயம் அடைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு (2025) இதன் எண்ணிக்கையானது 94 என்று அதிகரித்துள்ளது என்பதை இன்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களால் ஏற்பட்டுள்ள தீ விபத்துகளானது கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2025) 3% அதிகரித்து இருக்கிறது.
இந்த சம்பவங்களானது 2024 ஆம் ஆண்டில் 1990 ஆக பதிவாகியுள்ள நிலையில் 2025 ஆவது ஆண்டில் 2050 ஆக கூடியிருக்கிறது.
மொத்தமாக பதிவாகியுள்ள மின் வாகன விபத்துகளில் 1051 விபத்துக்கள் குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்டது என்பதையும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையானது தனது வருடாந்திர புள்ளி விவர அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.