சிங்கப்பூரில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

சிங்கப்பூரில் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

சிங்கப்பூரில் நேற்று (10.02.26) தோ பாயோவில் உள்ள லோரோங் 8 மற்றும் லோரோங் 7 இடையே உள்ள சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டது.

எதிர்பாராத விதமாக இந்த விபத்தில் 16 வயது சிறுவன் விபத்துக்கு உள்ளானான்.

இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு, தோ பயோவில் உள்ள லோரோங் 7 இல் நேற்று சரியாக பிற்பகல் 2:50 மணி அளவில் கிடைத்தது.

விரைந்து வந்த தற்காப்பு படையினர் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய 39 வயதை சேர்ந்த ஆண் ஓட்டுனரை போலீசார் விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK