சிங்கப்பூர்:தோ பாயோ லோரோங் 8, பிளாக் 229 இல் இன்று (29.07.2025) மதியம் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
பிளாக்கின் கீழ்தளத்தில் தீ பரவியதன் விளைவாக, அங்கிருந்து அடர்த்தியான கரும்புகை வெளிவந்தது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், மதியம் 1:33 மணியளவில் வாகனத்தில் பயணிக்கும் போது, சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அரசாங்க குடியிருப்பு பிளாக்கிலிருந்து வெளியேறும் கரும்புகையை பார்த்ததாக தெரிவித்தார்.