Kpods புதிய விதிமுறை அமல்படுத்திய பிறகு முதல் வழக்கு..!!!

Kpods புதிய விதிமுறை அமல் - முதல் வழக்கு..!!!

சிங்கப்பூர்: Kpods எனும் மின்னணு சிகரெட் தோட்டாக்கள் என்ற போதை பொருட்களை பயன்படுத்துதல் தொடர்பான ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வந்தது.

43 மின்னணு சிகரெட் தோட்டாக்களை உள்ளூரைச் சேர்ந்த 40 வயதான டெரக் கோர் பூன் சுன் என்பவர் செப்டம்பர் ஆறாம் தேதி மாலை 4:40 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 4, பிளாக் 631 இல் இருக்கும் ஒரு கார் பார்க்கிங்கில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி எட்டோமைடேட் வகுப்பு C மருந்தாக பட்டியலிட்டதிலிருந்து தொடர்புடைய குற்றங்களுக்காக போதைப்பொருள் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த புதிய மின்சிகரெட் விதிமுறையானது அமலுக்கு வந்த ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கு நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபரை இன்று 8- ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நபர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் இவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 பிரம்படிகளும் விதிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த வழக்கு குறித்து செப்டம்பர் 15 அன்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan