ஜூரோங் கிழக்கில் உள்ள தண்ணீர் குழாயிலிருந்து நீர் கசிவு ஏற்பட்ட காட்சியானது டிக் டாக் பயனர் sri.sulastri1 780 என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இதன் மூலம் அருகில் உள்ள சாலைகள் மற்றும் மூடப்பட்ட நடைபாதைகள் முழுவதுமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொழிலாளர்களின் கணுக்கால் ஆழத்திற்கு மேல் நீர் பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுப்புற பகுதியில் உள்ள கார்கள் செல்லும் வழிகள் அனைத்திலும் தண்ணீர் பரவியில் இருப்பது இந்த வீடியோ பதிவின் மூலம் தெளிவாக காண முடிந்தது.
இதுகுறித்து பொது பயன்பாட்டு வாரியம் தெரிவித்ததாவது:
அருகில் உள்ள குடியிருப்பாளர்களிடம் இருந்து நீர் வினியோக இடையூறுகள் குறித்து புகார்கள் வந்ததாகவும் இதில் பாதிக்கப்பட்ட குடியேறுப்பாளர்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு பல தண்ணீர் லாரிகளை அனுப்பியதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் ஜூரோங் ஈஸ்ட் அவன்யூ 1 மற்றும் டவுன்ஹால் சாலை சந்திப்பிற்கு அருகே உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டதாக பிற்பகல் 2 மணி அளவில் தகவல் கிடைத்தது என PUB தெரிவித்திருக்கிறது.
இதனால் அவசர பழுது பார்ப்புகளுக்காக நீர் விநியோக பாதையை தடை செய்து பொது பயன்பாட்டு வாரியம் உடனடியாக பழுது பார்க்க ஒரு குழுவை அனுப்பியது. அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இதனால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே அதிகாரிகள் பல தண்ணீர் லாரிகளை சமவெளிடத்திற்கு அனுப்பியதாக கூறினர்.
மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் பொது பயன்பாட்டு வாரியம் கூறியுள்ளது.