ஆசியாவிலேயே முதல்முறையாக…எங்கு இயக்கப்பட உள்ளது..??

ஆசியாவிலேயே முதல்முறையாக... எங்கு இயக்கப்பட உள்ளது..??

டிஸ்னி அட்வென்சர் என்பது டிஸ்னி குரூஸ் லைனின் புதிய மற்றும் மிகப்பெரிய பயணக் கப்பல் ஆனது ஆசியாவிலேயே முதல்முறையாக இயக்கப்பட உள்ளது.

இந்த நிறுவனமானது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூரை அதனுடைய சொந்த துறைமுகமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சொகுசு பயண கப்பல் ஆனது நேற்று இரவு (மார்ச் 3ஆம் தேதி) சிங்கப்பூரில் உள்ள மெரினா பே குரூஸ் மையத்தை நோக்கி கண் கவரும் வானவேடிக்கைகளோடு பிரமிக்க வைக்கும் நீர் மழைகளின் மத்தியில் கண் கவரும் இந்த சொகுசு கப்பல் ஆனது சிங்கப்பூரை வந்தடைந்தது.

முதல் பயணம் எப்போது?
இல்ல பிரம்மாண்டமான கப்பல் ஆனது முதன் முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அதனுடைய முதல் பயணத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்நிறுவனம் சில காரணங்களுக்காக இந்த மாதம் (மார்ச்) 10 ஆம் தேதியை முதல் பயணத்தை தள்ளி வைத்துள்ளது.

இந்த புதிய பயணக் கப்பலை கொண்டாடும் விதத்தில் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மெரினா பே சன்ஸ் மற்றும் டிஸ்னி குரூஸ் லைன் உள்ளிட்ட அனைவரும் இணைந்து இந்த மாதம் 13 முதல் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று இரவுகள் மெரினா விரிகுடாவில் 10 நிமிடத்திற்கு டிஸ்னி கருப்பொருளை கொண்ட மாணவேடிக்கை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர்.

முன்பதிவு எப்போது?
டிஸ்னி எக்ஸ்ப்ளோரரில் இந்த பையன கப்பலில் பயணம் செய்வதற்கு அதாவது மூன்று இரவுகள் பயணம் செய்வதற்கு மட்டுமே தற்பொழுது முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஒன்றாக பயணம் செய்பவர்கள் இரண்டு பேருக்கு மலிவான இன்சைட் கேபின் தற்போது ஒரு அறைக்கு தோராயமாக $2,700 என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK