திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!!

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்..!!!

சிங்கப்பூரில் பலவிதமான வேலை செய்யும் பர்மீட்டுகள் உள்ளது.

அந்தப் பர்மீட்டில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மூலம் சிங்கப்பூர் செல்கின்றனர்.

தற்பொழுது சிங்கப்பூரில் இ. பாஸில் வேலைக்கு செல்பவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு உள்ளனர்.

சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஏஜெண்டுகள் இ பாசில் மிகவும் அதிகமான சம்பளத் தொகையை போட்டு மனிதவள அமைச்சிடம் வேலைக்கு அனுமதி பெறுகின்றனர்.

ஆனால் விசாவில் உள்ள சம்பளத் தொகையை கொடுப்பதில்லை என்றும் அனுமதி பெறுவதற்காகவே மிகவும் அதிகமான தொகையை விசாவில் போடுவதாகவும் பல புகார்கள் எழுந்த நிலையில் சிங்கப்பூர் செல்லும் பல E pass ஊழியர்கள் சிங்கப்பூர் Immigration இல் திருப்பி அனுப்பப்பட்டன.

தற்பொழுது சென்னை மற்றும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் இபாஸ் ஊழியர்களில் ஒரு சிலரை இங்கேயே அதிக சம்பளம் போட்டிருப்பதால் உங்களை அனுப்ப முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்புகின்றனர்.

இப்பொழுது ஒரு சில விமானங்களிலேயே இந்த விதிமுறைகள் கடைபிடிக்கின்றனர். அடுத்த ஆண்டு(2026) ஜனவரி முதல் இன்னும் பல விமானங்களில் இந்த விதிமுறை அமலுக்கு வர உள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்புவது இ-பாஸில் உள்ள அதிகமான தொகையை சம்பளமாக போட்டுள்ள ஊழியர்களை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற விசாக்களில் செல்பவர்கள் இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஊழியர்களே.. ஏனென்றால், இ பாசில் செல்வதற்காக பல லட்சங்களில் அவர்கள் பணத்தை ஏஜென்டிடம் செலுத்துகின்றனர். ஆனால் ஒரு சில ஏஜென்ட்கள் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் பணத்தை சரியாக திருப்பி தருவது கிடையாது.

இதற்கு மாறாக அதிக சம்பளத்தை விசாவில் போட்டால் அதை மனித வள அமைச்சு நிராகரித்து விட்டால் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள் உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்டில் தெரியப்படுத்தவும்.

இது போன்ற சிங்கப்பூர் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது sgtamilan இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK